Enable Javscript for better performance
குளமாகக் காட்சியளிக்கும் மெளன்ட் பிளசன்ட் சாலை- Dinamani

சுடச்சுட

    

    கூடலூர்- மெளன்ட் பிளசன்ட் சாலை தொடர் மழையால் குளம் போலக் காட்சியளிக்கிறது.
    கூடலூர் நகராட்சியிலுள்ள ராஜகோபாலபுரம் பகுதியிலிருந்து மெளன்ட் பிளசன்ட் வழியாக நடுகூடலூர் பகுதிக்குச் செல்லும் சாலை சேதமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. தற்போது தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து தொடர்ச்சியாகப் பெய்வதால் சாலையிலுள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி சாலையின் பல பகுதிகள் குளங்களாகக் காட்சியளிக்கின்றன. மாவட்ட நிர்வாகம் இந்தச் சாலையைச் சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai