Enable Javscript for better performance
டான் டீ நிலத்தை வனத் துறைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு: நீதிமன்றம் செல்ல தொழிற்சங்கங்கள் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    டான் டீ நிலத்தை வனத் துறைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு: நீதிமன்றம் செல்ல தொழிற்சங்கங்கள் முடிவு

    By DIN  |   Published on : 25th July 2019 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு தேயிலைத் தோட்டக் கழகமான டான் டீ நிறுவனத்தின் தேயிலைத் தோட்டங்களை படிப்படியாக வனத் துறைக்கு வழங்கும் உத்தரவை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளன.
    தமிழக அரசின் தேயிலைத் தோட்டக் கழகமான டான் டீ நிறுவனத்தால் கூடலூர், பந்தலூர், சேரம்பாடி, சேரங்கோடு, நடுவட்டம் போன்ற பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதால் பராமரிக்க முடியவில்லை. அந்தப் பகுதிகளுக்கு வேலையாள்கள் செல்வதில்லை என்று கூறி படிப்படியாக அந்த எஸ்டேட்களை வனத் துறையிடம் ஒப்படைக்கும் செயல் நடைபெறுகிறது. 
    இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையிலிருந்து அழைத்துவரப்பட்டு மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்கள். 
    இந்த எஸ்டேட் நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைப்பதால் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்று தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.  இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளதாக ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் தலைவர் டி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai