Enable Javscript for better performance
நெடுஞ்சாலையில் தடுப்பு அமைத்த எஸ்டேட் நிர்வாகம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை- Dinamani

சுடச்சுட

    

    நெடுஞ்சாலையில் தடுப்பு அமைத்த எஸ்டேட் நிர்வாகம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

    By DIN  |   Published on : 25th July 2019 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பந்தலூர் பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட் நிர்வாகம் அங்குள்ள நெடுஞ்சாலையில் தடுப்பு அமைத்துள்ளதை அகற்ற புதன்கிழமை  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
    பந்தலூர் வட்டத்திலுள்ள பந்தலூரிலிருந்து கூவமூலா செல்லும் நெடுஞ்சாலையில் அங்குள்ள தனியார் எஸ்டேட் நிர்வாகம் தடுப்பு அமைத்துள்ளது. இதனால் வாகனங்கள் அவசரத் தேவைக்குச் செல்ல முடிவதில்லை. மேலும் பல கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. 
    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோட்டாட்சியர் கே.வி.ராஜ்குமார் தலைமையில் வருவாய்த் துறையினர் அந்தத் தடுப்பை அகற்றச் சென்றனர். அப்போது தனியார் நிறுவன ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் தடுப்புகள் அகற்றப்படவில்லை.
    இதுதொடர்பாக பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்  வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், பொதுமக்கள் பிரதிநிதிகள்,  எஸ்டேட் பொது மேலாளர் முரளி பணிக்கர், வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
    இந்த பேச்சுவார்த்தையில் எஸ்டேட் நிர்வாகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்று வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai