Enable Javscript for better performance
பில்லிகம்பை, கட்டபெட்டு கிராமங்களில் மதுக்கடைகளை அகற்றுமாறு மக்கள் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    பில்லிகம்பை, கட்டபெட்டு கிராமங்களில் மதுக்கடைகளை அகற்றுமாறு மக்கள் வேண்டுகோள்

    By DIN  |   Published on : 25th July 2019 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோத்தகிரி பகுதியில் உள்ள  பில்லிகம்பை, கட்டபெட்டு கிராமங்களில் உள்ள இரு அரசு மதுக்கடைகளால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த மதுக்கடைகளை அகற்றுமாறு அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    கோத்தகிரியைச் சுற்றியுள்ள 9 டாஸ்மாக் மதுக் கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளன. இதனால் பில்லிக்கம்பை, கட்டபெட்டு பகுதிகளிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளைத் தேடி வருவோர் அதிக அளவில் உள்ளனர். 
    இதனால் கிராம  மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்தக் கடைகளில் பார் வசதியில்லாததால் குடிகாரர்கள் கடையின் முன்பு அமர்ந்து மது அருந்துகின்றனர். மதுப் புட்டிகளை சாலையிலே வீசிச் செல்கின்றனர்.
    இந்த மதுக்கடைகளின் அருகே  பேருந்து நிறுத்தம், பள்ளி, வங்கி,நியாயவிலைக் கடை போன்றவை உள்ளதால், இவற்றை அகற்றுமாறு பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு கிராம மக்கள் மனுக்களை அளித்துள்ளனர். 
    எனினும் இதுவரை எந்த நடவடிகையும் இல்லாததால், விரைவில்  8 ஊர் கிராம மக்களுடன்  கலந்தாலோசித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai