Enable Javscript for better performance
மருந்தாக்கியல் துறையில் ஆராய்ச்சியும் முன்னேற்றமும்:  உதகையில் இரு நாள் கருத்தரங்கு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மருந்தாக்கியல் துறையில் ஆராய்ச்சியும் முன்னேற்றமும்:  உதகையில் இரு நாள் கருத்தரங்கு தொடக்கம்

    By DIN  |   Published on : 25th July 2019 09:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருந்தாக்கியல்  துறையில் ஆராய்ச்சியின் முயற்சியும் முன்னேற்றமும் குறித்த இரண்டு நாள்  கருத்தரங்கு உதகையில் புதன்கிழமை தொடங்கியது. 
    இந்தியாவில் பரவலாக அதிகரித்துக் காணப்படும்  புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிப்பது தொடர்பாக,  மருந்தாக்கியல்  துறையின் ஆராய்ச்சி முயற்சியும் முன்னேற்றமும் குறித்த 2 நாள் கருத்தரங்கு உதகை ஜேஎஸ்எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் புதன்கிழமை தொடங்கியது. 
    இந்தக் கருத்தரங்கில் இந்தியாவைச் சேர்ந்த 7 ஆராய்ச்சியாளர்களும், ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த 4 ஆராய்ச்சியாளர்களும், மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்த  3 ஆராய்ச்சியாளர்களும்  பங்கேற்றுள்ளனர். 
    மேலும் கோவை, மைசூரு பகுதிகளிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட மருந்தாக்கியல் கல்லூரி மாணவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ளனர். 
    கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் தலைமையில்  தொடங்கிய இந்தக் கருத்தரங்கின் துவக்கத்தில் ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் விளக்க உரையாற்றினார். தொடர்ந்து ஆராய்ச்சிகளின் விவரம் குறித்த  குறுந்தகடு வெளியிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai