Enable Javscript for better performance
மாவனல்லா அரசு உண்டு உறைவிடப் பள்ளியை  தூய்மைப்படுத்திய ஜெம் பார்க் நிர்வாகத்தினர்- Dinamani

சுடச்சுட

    

    மாவனல்லா அரசு உண்டு உறைவிடப் பள்ளியை  தூய்மைப்படுத்திய ஜெம் பார்க் நிர்வாகத்தினர்

    By DIN  |   Published on : 25th July 2019 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவனல்லாவில் உள்ள பழங்குடியினரின் அரசு உண்டு உறைவிடப் பள்ளியை ஜெம் பார்க் நிர்வாகத்தினர் தூய்மைப்படுத்தினர். 
    நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பில், மாவட்ட எல்லைகளிலுள்ள கிராமங்களிலும், பழங்குடியினர் வசிக்குமிடங்களிலும் பிரபல நிறுவனங்கள் கிராமங்களைத் தத்தெடுத்து தேவையான உதவிகளைச் செய்துதர வேண்டுமென கோரிக்கை  விடுக்கப்பட்டிருந்தது. 
    அதன் அடிப்படையில் மாவட்டத்திலுள்ள பிரபல பள்ளிகள், நிறுவனங்கள் பழங்குடியினக் கிராமங்களைத் தத்தெடுத்து தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன.
    மாவனல்லா பகுதியிலுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியை உதகையிலுள்ள ஜெம் பார்க் நிறுவனம் தத்தெடுத்து அப்பள்ளிக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.
    புதன்கிழமை அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாவனல்லாஅரசு உண்டு உறைவிடப் பள்ளிக்கு வண்ணம் பூசி, பள்ளி வளாகத்தைத் தூய்மைப்படுத்தித் தருமாறும் ஜெம் பார்க் நிர்வாகத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தார். 
    உடனடியாக ஜெம் பார்க் பெரு நிறுவன சமுதாயப் பொறுப்புப் பிரிவின் சார்பில் துணை நிர்வாக மேலாளர் சுரேஷ் நாயர்,  மனிதவள மேம்பாட்டு மேலாளர் பால் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் 6 துணை மேலாளர்கள், 15 ஊழியர்களுடன்  வண்ணம்  தீட்டும் பணியையும், தூய்மைப்படுத்தும் பணியையும் உடனடியாக மேற்கொண்டனர். அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களைப் பாராட்டினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai