முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
கட்டபெட்டு கிராமத்தில் உள்ள மதுக் கடையை அகற்ற வலியுறுத்தல்
By DIN | Published On : 30th July 2019 08:34 AM | Last Updated : 30th July 2019 08:34 AM | அ+அ அ- |

குன்னூர் அருகே உள்ள பில்லிக்கொம்பை, கட்டபெட்டு கிராமத்தில் உள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குன்னூர் அருகே உள்ள கட்டபெட்டு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் அரசு மதுபானக் கடை உள்ளதால் பெண்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மது அருந்துவோரில் பலரும் சாலையிலேயே படுத்துகொள்கின்றனர். மது பாட்டில்களை சாலையிலேயே உடைத்துவிட்டுச் செல்கின்றனர். எனவே, இங்கு உள்ள மதுக் கடையை அகற்ற வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.