முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைக் குட்டி சாவு
By DIN | Published On : 30th July 2019 08:31 AM | Last Updated : 30th July 2019 08:31 AM | அ+அ அ- |

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச் சரகத்தில் யானைக் குட்டி இறந்துகிடந்தது திங்கள்கிழமை தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச் சரகத்திலுள்ள நார்தன்ஹே வனப் பகுதியில் யானைக் குட்டி இறந்துகிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து வனத் துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். மசினகுடி கால்நடை மருத்துவர் கோச்சலன் மூலமாக யானைக்குப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. "பிறந்து ஒருசில மாதங்களே ஆன இந்த யானைக் குட்டி இறந்து சில நாள்கள் ஆகியிருக்கலாம். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தவுடன்தான் யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும்' என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.