Enable Javscript for better performance
குன்னூர் ரயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்- Dinamani

சுடச்சுட

    

    குன்னூர் ரயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு  அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

    By DIN  |   Published on : 01st June 2019 09:24 AM  |   அ+அ அ-   |    |  

    குன்னூர் ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
    குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் இருபுறங்களிலும் உள்ள இயற்கை அழகினை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் ஆர்வமுடன் பயணிக்கின்றனர்.
    இந்நிலையில் வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டு, தனியார் மூலம் கட்டணம் வசூலிக்கின்றனர். ரூ. 20 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் வாகனங்களை நிறுத்துபவர்களிடம் ரூ. 40 முதல் ரூ. 50 வரை வசூலிப்பதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ரயில்வே போலீஸாரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp