சுடச்சுட

  

  நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் ஜூன் மாதம் 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  உதகை வட்டம்- கக்குச்சி கிராமத்தில் ஓரலார் அணி சமுதாயக் கூடம், குன்னூர் வட்டம்- உபதலை கிராமத்தில் பிக்கட்டி சமுதாயக் கூடம், கோத்தகிரி வட்டம்- கெங்கரை கிராமத்தில் அந்த ஊர் சமுதாயக் கூடம்,  குந்தா வட்டம்- முள்ளிகூர் கிராமத்தில் எம்.ஜி.ஆர். நகர் சமுதாயக் கூடம்,  கூடலூர் வட்டம்- ஓவேலி கிராமத்தில் காமராஜ் நகர் அரசு தொடக்கப் பள்ளி வளாகம்,  பந்தலூர் வட்டம்- நெல்லியாளம் கிராமத்தில் பாக்னா அரசு தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
  அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இச்சிறப்பு முகாம்களில் பங்கேற்று தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai