கோத்தகிரி பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு

கோத்தகிரி, ஜக்கனாரை ஊராட்சிக்கு உள்பட்ட ஜக்கனாரை கீழ் கேரி கிராமத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடுப்

கோத்தகிரி, ஜக்கனாரை ஊராட்சிக்கு உள்பட்ட ஜக்கனாரை கீழ் கேரி கிராமத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடுப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்  என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், ஜக்கனாரை ஊராட்சிக்கு உள்பட்ட கீழ்கேரி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மூணு ரோடு ஹாடொலா என்ற நீர் ஆதாரத்தில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 
சமீபகாலமாக இப்பகுதிக்கு முறையாக குடிநீர் விநியோகிக்கப்படுவது இல்லை. இதனால் கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இங்குள்ள பெண்கள் நீண்ட தொலைவு நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலையில் உள்ளனர். இதுகுறித்து, ஜக்கனாரை ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
எனவே, மக்களின் சிரமங்களை உணர்ந்து அதிக திறன் கொண்ட மோட்டாரை பொருத்தி சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com