Enable Javscript for better performance
சர்வதேச யோகா தினம்: தினமணி சார்பில் பள்ளி, கல்லூரியில் யோகா, தியானப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச யோகா தினம்: தினமணி சார்பில் பள்ளி, கல்லூரியில் யோகா, தியானப் பயிற்சி

    By DIN  |   Published on : 21st June 2019 09:51 AM  |   அ+அ அ-   |    |  

    சர்வதேச யோகா தினத்தையொட்டி உதகையில் உள்ள எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி மற்றும் புனித திரேசன்னை உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் தினமணி நடத்திய யோகா மற்றும் தியான நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தினமணி நாளிதழின் சார்பில் தமிழகம் முழுதும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியரிடையே யோகா குறித்த விழிப்புணர்வு கடந்த 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, உதகையில் உள்ள எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியிலும், பிங்கர்போஸ்டு புனித திரேசன்னை உயர்நிலைப் பள்ளியிலும் யோகா நிகழ்வுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
     எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை கல்லூரி செயலர் மோதிலால் கட்டாரியா முன்னிலையில் கல்லூரி முதல்வர் பார்வதி தொடக்கி வைத்தார். இதில் அருவங்காடு பகுதியைச் சேர்ந்த யோகாசன பயிற்றுநர்கள் கே.சீனிவாசன், அனுராதா, பாரதி மற்றும் அச்சனக்கல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பயிற்சியளித்தனர்.  
    நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பயிற்சியாளர் சீனிவாசன் கூறியதாவது:
    உடலையும், மனதையும் இணைத்து ஒரு போராட்டமற்ற அமைதியான மனதுடனும் வாழ யோகா உதவுகிறது. எந்த செயலையும் மனம் விரும்பினாலும், சில நேரங்களில்  உடல் ஒத்துழைக்காத நிலை வரும். ஆனால் உடல் வலிமையையும்,  மன வலிமையையும் ஒருங்கிணைக்கும் சக்தி யோகாசனத்துக்கே உள்ளது.  உடல், மனம் மற்றும் நம்முள் இருக்கும் உயரிய சுயம் ஆகிய இம்மூன்றையும் இணைக்க தடையாக உள்ள அனைத்தும் சுத்திகரிப்பு செய்யப்பட்டு நமது ஆன்மாவை உணர்ந்து வாழ்க்கை பாதையை சீரமைக்க யோகா மற்றும் தியானம் உதவும் என்றார்.
    இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். 
     அதேபோல, உதகை பிங்கர்போஸ்டு புனித திரேசன்னை உயர்நிலைப் பள்ளியிலும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் தாளாளரும், தலைமையாசிரியருமான அருட்திரு அமல்ராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் டேவிட் பால்ராஜ் தலைமையில் 50க்கும்  மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் யோகாசனத்தில் பல்வேறு நிலைகளை நிகழ்த்திக் காட்டினர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்களும், பெற்றோர்களும் திரளாக பங்கேற்றனர்.


     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp