சுடச்சுட

  

  குன்னூரில் ஓடைப் பகுதி ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

  By DIN  |   Published on : 26th June 2019 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குன்னூரில் ஓடைப் புறம்போக்கு இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
   குன்னூர் பேருந்து நிலையப் பகுதி, டி.டி.கே. சாலை உள்ளிட்ட பகுதிகளில் 74 கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்து நெரிசல், நீர்நிலைகளில் மாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன.
   மேலும் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வருவாய்த் துறையினர்   தொடர்ந்து கடைகளுக்கு நோட்டீஸ் அளித்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புக் கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
   டி.டி.கே. சாலை, ராணுவ மையத்துக்கு செல்லும் முக்கிய சாலை என்பதாலும், இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளால் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாலும் ராணுவ தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதேபோல பேருந்து நிலைய பகுதியில் முதல் கட்டமாக 43 ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றினர்.  மீதமுள்ள ஆக்கிரமிப்புக் கடைகளும் விரைவில் அகற்றப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai