எரிவாயு உருளைகளில் வாக்காளர் விழிப்புணர்வு வில்லைகள் ஒட்டும் பணி தீவிரம்

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை ஏற்படுத்த பொதுமக்களுக்கு விநியோகம் செய்ப்படும்

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை ஏற்படுத்த பொதுமக்களுக்கு விநியோகம் செய்ப்படும் எரிவாயு உருளைகளில் விழிப்புணர்வு வாசகங்களை ஒட்டும் பணியை மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட்  திவ்யா வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்டம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக  உதகையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக எரிவாயு சேமிப்புக் கிடங்கில் எரிவாயு உருளையில் ஓட்டு போடுங்க என்ற வாசகம் அடங்கிய வில்லையை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேர்தலையொட்டி மாவட்டத்தில் 18 பறக்கும் படையும், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது எல்லைப் பகுதி மாவட்டங்களான கேரள மாநிலம், வயநாடு, கர்நாடக மாநிலம், குண்டல்பேட் பகுதியில் இருந்து தேர்தல் நேரத்தில் ஆயுதம், பணம், மதுபானம் கடத்தி வருவதை  கண்காணிக்க இப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளில் கூடுதலாக 4 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பது என வயநாடு மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 18 தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையின் போது முறையான ஆவணங்கள்  இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.ஒரு கோடியே  16 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்    செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com