குண்டாடா அரசுப் பள்ளி மாணவர்கள் கள ஆய்வுப் பயணம்

கோத்தகிரி அருகே உள்ள குண்டாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மக்களின்

கோத்தகிரி அருகே உள்ள குண்டாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, இயற்கை சூழலை அறிந்து கொள்ளும் வகையில் திங்கள்கிழமை கள ஆய்வுப் பயணம் சென்றனர்.
 இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், ஆசிரியை மல்லிகா ஆகியோர் தலைமையில் 30 மாணவ, மாணவிகள் இப்பயணத்துக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.  கட்டபெட்டு பகுதியில் இப்பயணத்தை கோத்தகிரி வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி தொடங்கிவைத்தார். 
இப்பயணத்தின்போது,  1941ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட “ரேலியா’ அணைக்கு மாணவ-மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அணையின் பயன்பாடு, சிறப்புகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அணையை ஒட்டியுள்ள வனப் பகுதிக்குச் சென்ற மாணவர்கள் அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், பல்லுயிர் சூழலைக் கண்டு  ரசித்தனர்.
  அதைத் தொடர்ந்து, பெட்டுமந்து பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்துக்குச் சென்று தோடர் இன மக்களின் கலாசாரம், வாழ்க்கை முறை, உணவு பழக்க, வழக்கங்கள், அவர்கள் பேசும் மொழி குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர்.  மேலும், வனப் பகுதியில் காட்டெருமை, கருங்குரங்கு, அணில் உள்ளிட்ட உயிரினங்களையும் பார்வையிட்டனர். மாணவர்களின் கள ஆய்வுப் பயணத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத் துறையினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com