பிளஸ் 2 பொதுத்தேர்வு: கடைசி நாள் தேர்வில் 288 பேர் பங்கேற்கவில்லை

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடைசி நாள் தேர்வுகளில் 288 மாணவர்கள் பங்கேற்கவில்லை.

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடைசி நாள் தேர்வுகளில் 288 மாணவர்கள் பங்கேற்கவில்லை.
 நீலகிரி மாவட்டத்தில் உள்ள 38 தேர்வு மையங்களில் பிளஸ் 2 தேர்வெழுதத் தகுதியுடைய 4,010 பேரில் 3,722 பேர் தேர்வெழுதினர். 
 உயிரியல் தேர்வில் 1,632 பேரில் 1,545 பேர் தேர்வெழுதியுள்ளனர். தாவரவியல் தேர்வில் 1,332 பேரில் 1,231 பேர் தேர்வெழுதினர். வரலாறு பாடத்தில் 551 பேரில் 495 பேர் எழுதினர். வணிகக் கணிதம் பாடத்தில் 175 பேரில் 173 பேர் தேர்வெழுதினர். அலுவலக மேலாண்மை பாடத்தில் 165 பேரில் 139 பேர் தேர்வெழுதினர். கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல் பாடத்தில் 155 பேரில் 139 பேர் தேர்வெழுதினர். 16 பேர் தேர்வெழுதவில்லை.
 தனித்தேர்வர்களைப் பொருத்தமட்டிலும் உயிரியல் பாடத்தில் 9 பேரில் 7 பேர் தேர்வெழுதினர். தாவரவியல் பாடத்தில் 7 பேரில் 6 பேர் தேர்வெழுதினர். வரலாறு பாடத்தில் 73 பேரில் 70 பேர் தேர்வெழுதினர். அலுவலக மேலாண்மை பாடத்தில் தேர்வெழுத வேண்டிய ஒருவரும் வரவில்லை. வணிக கணிதம், கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல் பாடத்தில் தேர்வெழுத வேண்டிய தலா ஒருவர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவர் மற்றும் மொழிப்பாட விலக்கு உள்ளிட்ட சலுகைகளைப் பெற்று 26 பேர் தேர்வெழுதினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com