உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
By DIN | Published On : 24th March 2019 03:25 AM | Last Updated : 24th March 2019 03:25 AM | அ+அ அ- |

உதகை எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் 16 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரியின் செயலர் மோதிலால் கட்டாரியா தலைமை வகித்தார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர்களான திருநாவுக்கரசு, ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பட்டங்களை வழங்கினர்.
இதில், விலங்கியல் பிரிவு மாணவிகள் கிருபா சூசன், மேகலா, வணிகவியல் பிரிவு மாணவி வாஹிதா, தகவல் தொழில்நுட்பவியல் பிரிவு மாணவி தேவயானி ஆகியோர் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றனர். முதுகலைப் படிப்பு முடித்த மாணவிகள் 19 பேருக்கும், இளங்கலைப் படிப்பு முடித்த மாணவிகள் 226 பேருக்கும் என மொத்தம் 245 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் மானேக்சந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் பார்வதி வரவேற்றார்.