ரஃபேல் விவகாரத்தில் மறைக்கப்படும் தகவல்கள்: உதகையில் ஆ.ராசா குற்றச்சாட்டு

2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பெரிதாக்கப்பட்டதாகவும், ஆனால்

2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பெரிதாக்கப்பட்டதாகவும், ஆனால் ரஃபேல் விவகாரத்தில் அனைத்துத் தகவல்களும் மூடி மறைக்கப்படுவதாகவும் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான திமுக வேட்பாளர்ஆ.ராசா குற்றம் சாட்டினார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசா உதகையில் தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய அரசியல் சட்டத்தை முடக்க நினைக்கும் மோடியின் ஆட்சியை வீழ்த்துவதற்காகவே இந்த மக்களவைத் தேர்தல்  நடைபெறுகிறது. இத்தேர்தலில் தமிழகத்திலுள்ள 18 சட்டப்பேரவைகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதால் மாநில ஆட்சியும் வீழ்த்தப்படுவது உறுதி.  
அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் தமிழக அரசு மக்களை ஏமாற்றி விட்டது. காலிங்கராயன் கால்வாய் வாய்க்காலிலிருந்து காரமடை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் தண்ணீர் விநியோகிக்கும் எளிமையான திட்டத்தையே அவிநாசி அத்திக்கடவு திட்டம் எனக் கூறி ஏமாற்றி வருகிறது.  
நீலகிரி மக்களவைத் தொகுதியில் 2009ஆம் ஆண்டில் போட்டியிட்டபோது அளித்த வாக்குறுதிகளையே தற்போதும் அளிக்கிறேன். ஒரு மக்களவை உறுப்பினரால் மத்திய அரசிடமிருந்து என்னென்ன நன்மைகளை பெற்றுத்தர முடியுமோ அவற்றையெல்லாம் நிறைவேற்றித் தருவேன். 
ரஃபேல் விமான பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி இதுவரையிலும் நேரடியாக  பதிலளிக்கவில்லை. ஆனாலும் 2ஜி அலைக்கற்றை பிரச்னையில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளைப் போல ரபேல் விவகாரம் பெரிதாக்கப்படவில்லை என்றார் ராசா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com