Enable Javscript for better performance
கொடநாடு எஸ்டேட் விவகாரம்: 4 பேர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: மனோஜ் சாமிக்கு ஜாமீன்- Dinamani

சுடச்சுட

    

    கொடநாடு எஸ்டேட் விவகாரம்: 4 பேர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: மனோஜ் சாமிக்கு ஜாமீன்

    By DIN  |   Published on : 28th March 2019 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் தொடர்புடைய மனோஜ் சாமிக்கு ஜாமீன் வழங்கி உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக சயன், மனோஜ், மனோஜ் சாமி, பிஜின் குட்டி,  தீபு ஆகிய 5 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், சயன்  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட மற்ற 5 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
    இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் விவகாரம்  தொடர்பான பிரதான வழக்கு  உதகை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு  ஒத்திவைத்து நீதிபதி வடமலை உத்தரவிட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரையும் விடுவிக்க வேண்டுமென தொடரப்பட்டிருந்த மற்றொரு  வழக்கின் விசாரணை பிற்பகலில் நடைபெற்றது. இதில், சயன் தற்போது  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவரது  கோரிக்கை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல, வாளையாறு மனோஜ்,  பிஜின் குட்டி,  தீபு ஆகியோரின்  மனுக்களும்  தள்ளுபடி செய்யப்பட்டன. மனோஜ் சாமிக்கு மட்டும் ஜாமீன் வழங்கி நீதிபதி  வடமலை உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai