Enable Javscript for better performance
திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாய, கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: உதயநிதி ஸ்டாலின் பேச்- Dinamani

சுடச்சுட

    

    திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாய, கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    By DIN  |   Published on : 28th March 2019 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக  கூட்டணி  ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்களும், கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று உதகையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
      நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் உதகையில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
      ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்முனைவோர்கள், வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் மோடி ஆட்சி வந்தால் இதே நிலைதான் ஏற்படும்.  அதிமுக  ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதற்கு ஒரே சாட்சி பொள்ளாச்சி பாலியல் விவகாரம். பெண்களைப் பெற்ற அனைவரையும் அச்சுறுத்தும் சம்பவமாக அமைந்துள்ளது.
     தமிழகத்திலுள்ள ஆட்சியையும்,  மத்தியில் மோடியின் ஆட்சியையும் ஒழிக்க வேண்டும்.
      திமுக  கூட்டணி  ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்களும், கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.  மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும். உதகையில் உள்ள ஹெச்பிஎப் தொழிற்சாலை வளாகம் அரசு மருத்துவமனையாக மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார் ஸ்டாலின். திமுக., கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்.
     நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா உடனிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai