Enable Javscript for better performance
வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

    By DIN  |   Published on : 28th March 2019 09:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்களிப்பதன் அவசியம் குறித்து பந்தலூரில் பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டன.
    கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியவை சார்பில் பந்தலூரில் பள்ளி மாணவ, மாணவியருக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மாணவ, மாணவியர் மூலமாக அவர்களின் பெற்றோர்கள் மக்களவைத் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது. இதில், நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் காளிமுத்து, பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம், காந்தி பொது சேவை மைய இயக்குநர் நெளஷாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai