முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
கூடலூர் சிவன்மலையில் இன்று பௌர்ணமி கிரிவலம்
By DIN | Published On : 18th May 2019 06:40 AM | Last Updated : 18th May 2019 06:40 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டம், கூடலூர் சிவன்மலையில் சனிக்கிழமை பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.
கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் பௌர்ணமி கிரிவலத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் சிவன்மலை அடிவாரத்தில் கூடி, சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்கின்றனர். மேலும் மலை உச்சியில் உள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜை, அலங்கார ஆராதனைகள் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளர்ச்சி, சமூக நல அறக்கட்டளையின் தலைவர் கேசவன், செயலாளர் நடராஜன், சிவன்மலை நிர்வாகி பாண்டு குருசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.