முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
கோத்தகிரி பகுதியில் பீன்ஸ் அறுவடைப் பணிகள் மும்முரம்
By DIN | Published On : 18th May 2019 06:41 AM | Last Updated : 18th May 2019 06:41 AM | அ+அ அ- |

கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் பீன்ஸ் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கோத்தகிரி சுற்று வட்டாரத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக, மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு, வறட்சி நிலவிய போதிலும் விவசாயிகள் பீன்ஸ் பயிரிட்டுள்ளனர்.
கோத்தகிரியில் கூக்கல்தொறை, கட்டபெட்டு, நெடுகுளா, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் பீன்ஸ் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 120-க்கு குறையாமல் விலை கிடைக்கிறது. தோட்டப் பராமரிப்பு செலவு, விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட செலவினங்களை ஒப்பிடுகையில் இந்த விலை ஓரளவு ஆறுதலாக அமைந்துள்ளது.
கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பீன்ஸ், மழையால் பாதிக்கக் கூடும் என்பதால், விவசாயிகள் அறுவடையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.