குந்தா அருகே கடமான் மாமிசம் சமைத்த 4 பேர் கைது
By DIN | Published On : 18th May 2019 06:39 AM | Last Updated : 18th May 2019 06:39 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டம், குந்தா அருகே கடமான் மாமிசத்தை சமைத்த 4 பேரை வனத் துறையினர் வெள்ளிக் கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
குந்தா வனச் சரகத்துக்கு உள்பட்ட பெல்லத்தி கொம்பை ஆதிவாசி கிராமத்தில் சிலர் கடமான் கறி சமைப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத் துறை உதவி காப்பாளர் சரவணன், வனச் சரகர் சரவணன், வனத் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர்.
இதில், சிலர் கடமான் மாமிசத்தை சமைத்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ரங்கசாமி, ரமேஷ், சரவணன், நாகேஷ் ஆகிய நான்கு பேர் மீதும் வனத் துறையினர் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உதகை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான கிருஷ்ணண் என்பவரை தேடி வருகின்றனர்.