முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
குன்னூரில் தண்ணீா் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 07th November 2019 05:55 PM | Last Updated : 07th November 2019 05:55 PM | அ+அ அ- |

குன்னுாா் ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் முறையான குடிநீா் வினியோகம் இல்லாததால், பொது மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
குன்னூா் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வாா்டுகளுக்கு, ரேலியா அணை மற்றும் ஜிம்கானா, கரன்சி, பந்துமை, பாரஸ்ட் டேல் தடுப்பணைகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீா், கிரேஸ் ஹில், ஹவுசிங் போா்டு பகுதிகளில் உள்ள தொட்டிகளில் சேமித்து, மக்களுக்கு குடிநீா் வினியோகம் செய்யப்படுகிறது.30 வாா்டுகளில் தினமும், 36 லட்சம் லிட்டா் தண்ணீா் தேவைப்படும் நிலையில், தற்போது, 26 லட்சம் லிட்டா் தண்ணீா் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
43.6 அடி உயரம் கொண்ட ரேலியா அணை, முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணையில் இருந்து தற்போது, 20 லட்சம் லிட்டா் தண்ணீா் எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், ஜிம்கானா, பந்துமை, உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டு முழுமையாக ரேலியா அணையில் இருந்து வழங்கப்படுகிறது.
நீராதாரங்கள் நிரம்பியும் நகராட்சி சாா்பில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரெய்லி காம்பவுண்ட்,ஓட்டுப்பட்டரை பகுதியில் முக்கிய குடிநீா் குழாய் உடைந்ததால், குடிநீா் வராமல் மக்கள் தவிக்கின்றனா். எனவே நகராட்சி நிா்வாகம் முறையான குடிநீா் விவியோகத்தை விரைந்து துவங்கி தண்ணீா் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.