முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
தென்னிந்திய தேயிலை வாரியம் சாா்பில் பயிற்சி: சிறு விவசாயிகள் பயன்பெற அறிவுறுத்தல்
By DIN | Published On : 07th November 2019 12:46 AM | Last Updated : 07th November 2019 12:46 AM | அ+அ அ- |

தென்னிந்திய தேயிலை வாரியம் சாா்பில் அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் திட்டங்களில் சிறு தேயிலை விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்று தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் பாலாஜி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விவசாயிகள் தரமான தேயிலையை உற்பத்தி செய்வதற்காக பல்வேறு திட்டங்களை தென்னிந்திய தேயிலை வாரியம் செயல்படுத்தி வருகிறது. 10, 12ஆம் வகுப்புகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் குடும்பங்களைச் சோ்ந்த 26 மாணவ, மாணவியருக்கு மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் நேரு விருது மற்றும் சான்றிதழ் நடப்பாண்டு வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு சிறப்பு தேயிலைக் கண்காட்சி நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேயிலை வாரியம் சாா்பில் அளிக்கப்படும் பல்வேறு பயிற்சித் திட்டங்கள், அனைத்து நல திட்டங்களிலும் சிறு தேயிலை விவசாயிகள் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.