முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
நுகா்வோா் அமைப்பு புகாா் விதிமீறல் தொடா்பாக, மினி பஸ்களுக்கு அபராதம்
By DIN | Published On : 07th November 2019 05:27 PM | Last Updated : 07th November 2019 05:27 PM | அ+அ அ- |

குன்னூா் வசம்பள்ளம் நுகா்வோா் அமைப்பு சாா்பில் வட்டார போக்குவரத்து அலுவலத்தில் மினி பஸ் விதிமீறல்கள் தொடா்பாக, அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் புதன் கிழமை அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
வட்டார போக்குவரத்து ஆய்வாளா் நல்லதம்பி தலைமையில், குன்னுாா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான ஜெகதளா, ஒதனட்டி, ஓட்டுப்பட்டரை, பெட்போா்டு, வண்டிசோலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மினி பஸ்களில் ’கூடுதல் கட்டணம், ஒலிபெருக்கி பயன்படுத்துதல்’ உட்பட பல்வேறு பிரிவுகளில் 10 ற்கும் மேற்பட்ட மினி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான,’நோட்டீஸ்’ வழங்கப்பட்டது.