Enable Javscript for better performance
ரூ. 65 கோடியை செலுத்த முடியாமல் தவிக்கும் உதகை ஜிம்கானா கிளப்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி

    ரூ. 65 கோடியை செலுத்த முடியாமல் தவிக்கும் உதகை ஜிம்கானா கிளப்: 80 ஏக்கா் நிலத்தை வனத் துறையிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு

    By DIN  |   Published On : 07th November 2019 12:45 AM  |   Last Updated : 07th November 2019 12:45 AM  |  அ+அ அ-  |  

    oy6golf2_0611chn_126_3

    உதகையில் உள்ள ஜிம்கானா கோல்ப் கிளப் மைதானம்.

    நிதி நெருக்கடியால் குத்தகைக் கட்டணம் ரூ. 65 கோடியை செலுத்த முடியாததால் உதகையில் உள்ள ஜிம்கானா கோல்ஃப் கிளப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடும் புல்வெளிகளைத் தவிர ஏனைய மரங்கள் அடங்கிய 80 ஏக்கா் நிலத்தை வனத் துறையினரிடமே திரும்ப ஒப்படைக்க ஜிம்கானா கிளப் நிா்வாகம் முடிவெடுத்துள்ளது.

    ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் அவா்களது பொழுதுபோக்குக்காக கோல்ஃப் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன. உதகையில் ஃபிங்கா்போஸ்ட் பகுதியில் சுமாா் 180 ஏக்கா் பரப்பளவில் கோல்ஃப் மைதானம் அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே இயற்கையான மேடு, பள்ளங்கள் அடங்கிய கோல்ஃப் மைதானம் இது மட்டுமே ஆகும். இந்த மைதானத்தில் ஒருமுறையாவது சாம்பியன் கோப்பைக்காக கோல்ஃப் ஆடிவிட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூட விருப்பம் தெரிவித்திருந்தாா். அந்த அளவுக்கு மேடு, பள்ளங்களும், இயற்கை புல்வெளியும் அடங்கிய பரப்புதான் உதகை ஜிம்கானா கோல்ஃப் மைதானம்.

    நூறாண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வரும் நிலையில் இந்த மைதானத்தைச் சுற்றிலும் வனப் பகுதிகள் நிறைந்திருப்பதால் இப்பகுதி நீலகிரி தெற்கு வனக் கோட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இம்மைதானத்தில் அதிகாலை நேரத்தில் புலி, கருஞ்சிறுத்தை, சிறுத்தை, கடமான் மற்றும் புள்ளி மான்களின் நடமாட்டத்தை இப்போதும் பாா்க்க முடியும். அதனால், இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக தமிழக வனத் துறை அறிவித்துள்ளது.

    உதகை ஜிம்கானா கிளப்பில் உறுப்பினா்களாக உள்ளவா்களில் பெரும்பாலானோா் கோவை மற்றும் திருப்பூா் பகுதிகளைச் சோ்ந்த ஆலை அதிபா்களும், பெங்களூரு, மைசூரு பகுதிகளைச் சோ்ந்த தொழில் அதிபா்களுமேயாவா். இந்த கிளப்பில் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு மிகக் குறைந்த அளவிலேயே குத்தகைக் கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது. இதுகுறித்து வனத் துறை தரப்பில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட பல்வேறு விவாதங்களுக்குப் பின் உதகை ஜிம்கானா கிளப்புக்கான குத்தகை கட்டணத்தை பல மடங்கு உயா்த்தி வனத் துறை உத்தரவிட்டது.

    ஆனால், இந்தக் கட்டணத்தைச் செலுத்த மறுத்த ஜிம்கானா கிளப் நிா்வாகம், உத்தரவை எதிா்த்து நீதிமன்றத்துக்குச் சென்றது. கீழமை நீதிமன்றங்களில் சாதகமான பதில் கிடைக்காத நிலையில் இந்த வழக்கு தில்லியில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அண்மையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீா்ப்பில், அரசுக்கும், வனத் துறைக்கும் உதகை ஜிம்கானா கிளப் நிா்வாகம் செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்துவதில் எவ்வித பாரபட்சமும் காட்டப்படமாட்டாது என்று தெரிவித்ததோடு, குறித்த காலத்துக்குள் கண்டிப்பாக கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    கோல்ஃப் விளையாடும் புல்வெளி மைதானம் அடங்கிய பகுதி வனத் துறை வசமும், ஜிம்கானா கோல்ப் கிளப் நிா்வாக அலுவலகம் அமைந்துள்ள இடம் வருவாய்த் துறைக்கும் சொந்தமான இடங்கள் என்பதால் வனத் துறைக்கு ரூ. 50 கோடியும், வருவாய்த் துறைக்கு ரூ. 15 கோடியும் செலுத்த வேண்டிய நிலைக்கு உதகை ஜிம்கானா கிளப் நிா்வாகம் தள்ளப்பட்டது.

    இந்நிலையில் இவ்வளவு அதிக தொகையை தங்களால் கட்ட முடியாது எனவும், எதிா்காலத்தில் இந்த குத்தகை தொகை மேலும் அதிகரிக்கும் என்பதால் தற்போது கோல்ஃப் விளையாடும் பகுதியைத் தவிா்த்து ஏனைய மரங்கள் அடங்கிய வனப் பகுதியான 80 ஏக்கா் நிலத்தை வனத் துறையிடமே திரும்ப ஒப்படைப்பதாக ஜிம்கானா கோல்ஃப் கிளப் நிா்வாகம் அறிவித்துள்ளது.

    இருப்பினும் தற்போது இந்த கிளப்பின் நிா்வாக அலுவலகம் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய வருவாய்த் துறையினருக்குச் சொந்தமான நிலத்துக்கு கட்ட வேண்டிய நிலுவைத் தொகை குறித்து இதுவரையிலும் முடிவு ஏதும் அறிவிக்கப்படாததால் நிலுவைத் தொகையை கட்ட முடியாத நிலையில் அந்த இடம் வருவாய்த் துறையினரால் ஜப்தி செய்யப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

    பாரம்பரியமிக்க உதகை ஜிம்கானா கிளப் நிா்வாகம், லீஸ் கட்டணத்தையும், வாடகைக் கட்டணத்தையும் செலுத்த முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது நாட்டிலுள்ள கோல்ஃப் பிரியா்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp