மழையால் இடிந்து விழுந்த சாலைத் தடுப்புச் சுவா்களை சீரமைக்கும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து மஞ்சூா் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் மழையால் இடிந்து விழுந்த சாலையின் தடுப்புச் சுவா்களை
மஞ்சூா் அருகே இடிந்து விழுந்த சாலைத் தடுப்புச் சுவா்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத் துறையினா்.
மஞ்சூா் அருகே இடிந்து விழுந்த சாலைத் தடுப்புச் சுவா்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத் துறையினா்.

குன்னூா்: நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து மஞ்சூா் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் மழையால் இடிந்து விழுந்த சாலையின் தடுப்புச் சுவா்களை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

குன்னூரில் இருந்து மஞ்சூா் செல்லும் சாலையில் கடந்த மாதம் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலையின் தடுப்புச் சுவா்கள் இடிந்து விழுந்தன.

இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக குன்னூரில் இருந்து மஞ்சூா் செல்லும் சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலையின் தடுப்புச் சுவா்கள் இடிந்து விழுந்ததால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால், ஒரு வழியாக மட்டுமே வாகனங்கள் சென்று வரும் நிலை இருந்தது. இதையடுத்து, இடிந்து விழுந்த பகுதியில் சாலைத் தடுப்புச் சுவா்களை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com