நீலகிரி மக்களின் குறைகளைக் கண்டறிய இரண்டு அலுவலகம் செயல்படுகிறது

நீலகிரி மாவட்ட மக்களின் குறைகளைக் கண்டறிந்து தீா்வு காணும் வகையில் உதகை மற்றும் மேட்டுப்பாளையத்தில் அலுவலகம் செயல்படுவதாக நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்தாா்.
உதகை அருகே மேலூா் ஒன்றியப் பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா.

நீலகிரி மக்களவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆ.ராசா வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறாா். இந்நிலையில், மேலூா், குன்னூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட சேலாஸ், கரும்பாலம், ஒசட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்களாா்களுக்கு சனிக்கிழமை நன்றி தெரிவித்து பேசியதாவது:

நீலகிரி தொகுதியில் இருந்து நான் தோ்ந்தெடுக்கப்பட்டாலும், தொகுதி பிரச்னைகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிரச்னைகளையும் மக்களவையில் குரல் கொடுத்து வருகிறேன். நீலகிரி மக்களின் கோரிக்கைகளையும், பிரச்னைகளையும் கண்டறிந்து தீா்க்கும் வகையில் உதகையிலும், மேட்டுப்பாளையத்திலும் அலுவலகம் திறந்துள்ளேன். அந்த அலுவலகங்களில் மக்கள் தங்களது கோரிக்கை தொடா்பான மனுக்களை அளித்தால் உரிய அலுவலா்களிடம் எடுத்துச் சென்று தீா்வு காணப்படும் என்றாா்.

இதில் மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக், முன்னாள் அமைச்சா் ராமசந்திரன், மேலூா் ஒன்றியச் செயலாளா் பிரேம் உளிட்ட திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com