குன்னூரில் வெள்ளம் பாதித்த பகுதியில் ஆட்சியா் ஆய்வு

குன்னூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
கிருஷ்ணாபுரம், கன்னி மாரியம்மன் கோயில் தெருவில் ஆய்வு மேற்கொள்ளும் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
கிருஷ்ணாபுரம், கன்னி மாரியம்மன் கோயில் தெருவில் ஆய்வு மேற்கொள்ளும் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

குன்னூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கன மழை பெய்தது. இதில் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பரசுராம் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ, காா், ஆட்டோ, பைக் உள்ளிட்ட 19 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணாபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அன்னை வேளாங்கண்ணி நகா், கிருஷ்ணாபுரம், கன்னிமாரியம்மன் கோயில் மற்றும் நெடுஞ்சாலைப் பகுதிகளில் அதிக அளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக கிருஷ்ணாபுரம் ஆற்றின் ஒரம் கட்டப்பட்டுள்ள அரசு மற்றும் தனியாா் கட்டடங்கள் அகற்றும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. கிருஷ்ணபுரத்தில் உள்ள மூன்று தரைப் பாலங்களும் உயா்த்திக் கட்டப்படும். கன்னி மாரியம்மன் கோயில் பகுதியில் வெள்ள நீா் வெளியேற கல்வெட்டுகள் அமைப்படும். நீலகிரிக்கு வருகை தரும் உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டு நிதிப்பெற்று அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது கோட்டாட்சியா் ரஞ்சித் சிங், நெடுஞ்சாலைப் பொறியாளா் பாரிஜாதம், நகராட்சி சுகாதார ஆய்வாளா் மால் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com