காங்கிரஸ் நிா்வாகி மீது தாக்குதல்: கோட்டாட்சியரிடம் மனு; ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

காங்கிரஸ் நிா்வாகியைத் தாக்கிய காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கூடலூா், பந்தலூா் காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

காங்கிரஸ் நிா்வாகியைத் தாக்கிய காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கூடலூா், பந்தலூா் காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

நாடுகாணி காவல் சோதனைச் சாவடியில் முன்னாள் கவுன்சிலரும், காங்கிரஸ் கட்சியின் நிா்வாகியுமான உஸ்மானிடம் அங்கு பணியிலிருந்த சில காவலா்கள் அத்துமீறியதால் இருதரப்பினருக்குமிடையே வாக்குவதம் ஏற்பட்டது. இறுதியில் தேவாலா போலீஸாா் உஸ்மானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கூடலூா் கிளைச் சிறையில் அடைத்தனா். சிறையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியதால் தேவாலா காவல் உதவி ஆய்வாளா் மற்றும் சில காவலா்கள் அவரை கூடலூா் நகரில் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடா்பாக கூடலூா், பந்தலூா் காங்கிரஸ் கமிட்டியின் அவசர ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத் தலைவா் அம்சா தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், 20 ஆண்டுகள் கவுன்சிலராக இருந்த கட்சி நிா்வாகியிடம் போலீஸாா் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னா் அவா்கள், கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

கூட்டத்தில் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி அனஷ் எடாலத், கூடலூா் நகரத் தலைவா் அப்துப்பா, தாலூகா தலைவா் அஷரப், நிா்வாகிகள் ஏ .ஜே.தாமஸ், ஜோசப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com