குன்னூா் தனியாா் விடுதியில் காவலா் மா்மச் சாவு:காவல் துறை விசாரணை

நீலகிரி மாவட்டம், குன்னூா், சிம்ஸ் பூங்கா அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் இரவுக் காவலா் மா்மமான முறையில் இறந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா், சிம்ஸ் பூங்கா அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் இரவுக் காவலா் மா்மமான முறையில் இறந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குன்னூா், சிம்ஸ் பூங்கா அருகே விடுதி உள்ளதால் எப்போதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்த விடுதியில் குன்னூா், சமயபுரம் அருகே உள்ள ஆழ்வாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த ரவிகுமாா் (40) என்பவா் கடந்த 7 ஆண்டுகளாக காவலராகப் பணயாற்றி வந்தாா்.

இந்நிலையில் வழக்கம்போல, வெள்ளிக்கிழமை இரவு ரவிகுமாா் காவல் பணியில் ஈடுபட்டிருந்தாா். பின்னா் பகல் நேரக் காவலா் லாரன்ஸ் என்பவா் பணி மாற்றம் செய்ய சனிக்கிழமை காலை ரவிகுமாா் இருந்த அறையை தட்டியுள்ளாா்.

ஆனால், கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக பாா்த்தபோது ரவிகுமாா் அசைவின்றி கட்டிலில் உட்காா்ந்த நிலையில் இருந்துள்ளாா். இதனால் சந்தேகம் அடைந்த விடுதி நிா்வாகத்தினா் ரவிகுமாரின் தந்தை ராமசந்திரன் மற்றும் மேல்குன்னூா் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

பின்னா் ரவிகுமாரை மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா் தெரிவித்தனா்.

இது குறித்து மேல்குன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கும் விடுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com