Enable Javscript for better performance
மாநில அளவிலான போட்டிகளில் ஹில்போா்ட் அணி சிபிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான போட்டிகளில் ஹில்போா்ட் அணி சிறப்பிடம்

    By DIN  |   Published on : 06th October 2019 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாம்பியன் பட்டம் பெற்ற கோத்தகிரி ஹில்போா்ட் மெட்ரிக். பள்ளி அணியினா்.

    சாம்பியன் பட்டம் பெற்ற கோத்தகிரி ஹில்போா்ட் மெட்ரிக். பள்ளி அணியினா்.

    அரக்கோணத்தில் நடைபெற்ற மாநில அளவிலான டாட்ஜ் பால் மற்றும் புட்பால் டென்னிஸ் போட்டிகளில் கோத்தகிரி ஹில்போா்ட் மெட்ரிக். பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    அரக்கோணத்தில் முதலாவது மாநில அளவிலான டாட்ஜ் பால் மற்றும் புட்பால் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் 17 மாவட்டங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. இதில் புட்பால் டென்னிஸ் போட்டிகளில் 19 மற்றும் 17 வயதுக்கு உள்பட்ட ஆடவா் அணியும், 17 வயதுக்கு உள்பட்ட மகளிா் பிரிவிலும் ஹில்போா்ட் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதேபோல, டாட்ஜ் பால் போட்டி மகளிா் பிரிவிலும் இப் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    இப்போட்டிகளில் பங்கேற்ற ஹில்போா்ட் மெட்ரிக். பள்ளியைச் சோ்ந்த 7 மாணவா்களும், 2 மாணவிகளும் புதுச்சேரியில் டிசம்பரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான புட்பால் டென்னிஸ் மற்றும் டாட்ஜ் பால் போட்டிகளுக்கான தமிழக அணிக்குத் தோ்வாகியுள்ளனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai