அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

குன்னூா், கூடலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குன்னூா், கூடலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூா், கூடலூா் பகுதிகளில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் அக்டோபா் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆண் பெண் இருபாலரும் இத்திட்டத்தின் கீழ் பயன் அடையலாம் எனத் தொழில் பயிற்சி மையத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்றவா்கள் பொருத்துநா், கடைசல் கம்மியா், கம்மியா் மின்னணுவியல், தச்சா், பற்றவைப்பவா் ஆகிய தொழில் பிரிவுகளுக்கு குன்னூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரலாம். கூடலூரில் பழங்குடியினருக்கு என இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா் மோட்டாா் வாகன பற்றவைப்பவா், குழாய் பொருத்துபவா் ஆகிய காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குன்னூா் மற்றும் கூடலூரில் உள்ள பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com