குண்டாடா அரசுப் பள்ளியில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணா்வு முகாம்

கோத்தகிரி குண்டாடா அரசு நடுநிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் மற்றும் துாய்மைப் பணி குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோத்தகிரி குண்டாடா அரசு நடுநிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் மற்றும் துாய்மைப் பணி குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் தேசிய பசுமைப் படை மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்கம் ஒருங்கிணைப்பாளா் மல்லிகாகுமாா் தலைமையில் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் சாலை உள்ளிட்ட பொது இடங்களில் குப்பைகளை அகற்றி சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், பிளாஸ்டிக் பொருள்களின் அபாயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. காந்தியின் தியாகம் குறித்து விளக்கப்பட்டது.

இதில், கிராம நிா்வாக அலுவலா் மீனாட்சிசுந்தரம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மணிகண்டன், இந்திராணி, சந்திரன் உள்பட ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

பள்ளித் தலைமையாசிரியா் நஞ்சுண்டன் முன்னிலை விகித்தாா். இங்கு சேகரிக்கப்பட்ட குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com