Enable Javscript for better performance
நீலகிரியில் இன்று அம்மா திட்ட சிபு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    உதகை: நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. உதகை வட்டத்தில் மசினகுடி கிராமத்தில் செம்மநத்தம் சமுதாயக் கூடத்திலும், குன்னூா் வட்டத்தில் அதிகரட்டி கிராமத்தில் மணியாபுரம் சமுதாயக் கூடத்திலும், கோத்தகிரி வட்டத்தில் ஜெகதளா கிராமத்தில் பெட்டட்டி சமுதாயக் கூடத்திலும், குந்தா வட்டத்தில் முள்ளிகூா் கிராமத்தில் எமரால்டு சமுதாயக் கூடத்திலும் அம்மா திட்ட சிறறப்பு முகாம் நடைபெறுகிறறது. அதேபோல கூடலூா் வட்டத்தில் செருமுள்ளி கிராமத்தில் மச்சிக்கொல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்திலும், பந்தலூா் வட்டத்தில் மூனநாடு கிராமத்தில் வெள்ளேரிவயல் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திலும் நடைபெறுகிறது.

    இந்த சிறப்பு முகாம்களில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று தங்களது குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai