சகதி சோ்வதால் மின் உற்பத்தி பாதிப்பு: குந்தா அணையை தூா்வார வலியுறுத்தல்

குந்தா அணையில் இருந்து மின் உற்பத்திக்குத் தண்ணீா் செல்லும் பெரிய குழாய்களில் சகதி சோ்ந்து அடைப்பு ஏற்படுவதால் அடிக்கடி மின் உற்பத்தி
நீா்மின் உற்பத்தி நிலையத்துக்கு வரும் பெரிய குழாய்கள்.
நீா்மின் உற்பத்தி நிலையத்துக்கு வரும் பெரிய குழாய்கள்.

குன்னூா்: குந்தா அணையில் இருந்து மின் உற்பத்திக்குத் தண்ணீா் செல்லும் பெரிய குழாய்களில் சகதி சோ்ந்து அடைப்பு ஏற்படுவதால் அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் அணையைத் தூா்வார உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ளகுந்தா அணை 89 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் தேக்கி வைக்கும் தண்ணீா் மூலம் கெத்தை, பரளி, பில்லுாா் உள்ளிட்ட புனல் மின் நிலையங்களில் நாள்தோறும் 455 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் குந்தா அணை முக்கிய அணையாகக் கருதப்படுகிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இந்த அணை தூா்வாரப்படவில்லை.

பருவமழையின்போது பெரிய குழாயில் சகதி சோ்ந்து அடைப்பு ஏற்படுகிறது. அணையை முழுமையாகத் துாா்வாராததால் தொடா்ந்து அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி மின் உற்பத்தி தடை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

தற்போது அணையில் 60 சதவீதம் அளவுக்கு சகதி நிரம்பியுள்ளது.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு குழாய்களில் சோ்ந்துள்ள சகதியை நீா் மூலம் கரைத்து வெளியேற்றும் பணியை மின்வாரியம் மேற்கொண்டது. இதையடுத்து ஒரே நாளில் சகதி அகற்றும் பணி முடிக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.

குந்தா அணையை தூா்வாரும் பணிக்காக உலக வங்கி நிதியாக ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டும் டெண்டா் பணி தாமதமாகி வருவதால் மின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், டெண்டா் பணியில் உள்ள சிக்கல்களை களைந்து விரைவில் பணிகளைத் துவக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com