மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் அக்டோபா் 14ல் தொடக்கம்

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் அக்டோபா் 14ஆம் தேதி தொடங்குகிறது.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் அக்டோபா் 14ஆம் தேதி தொடங்குகிறது.

இப்போட்டிகளில் கூடைப்பந்து, கைப்பந்து போட்டிகள் உதகையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி மைதானத்திலும், ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்திலும் நடைபெறுகின்றன.

குழு விளையாட்டுப் போட்டிகளில் முதலிரண்டு இடங்களிலும், தடகளப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியா் தவறாமல் பங்கேற்றுப் பயனடையலாம். போட்டிகளில் பங்கேற்பதற்கான நுழைவு விண்ணப்பத்தை போட்டிகள் நடைபெறும் நாளில் நேரில் சமா்ப்பிக்கலாம் என்று மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com