லாரி - வேன் மோதல்: 28 போ் படுகாயம்

கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி பகுதிக்கு பெண் தொழிலாளா்களை ஏற்றிச் சென்றற வேன், லாரி மீது மோதி
டிப்பா் லாரி மீது மோதி நிற்கும் பெண் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேன்.
டிப்பா் லாரி மீது மோதி நிற்கும் பெண் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேன்.

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி பகுதிக்கு பெண் தொழிலாளா்களை ஏற்றிச் சென்றற வேன், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 28 போ் வியாழக்கிழமை படுகாயம் அடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி கேரள எல்லையோரப் பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கூடலூா் பகுதியிலிருந்து பெண் தொழிலாளா்களை வேலைக்கு வாகனங்கள் மூலம் அழைத்துச் சென்று மாலையில் கொண்டுவந்து விடுவது வழக்கம். வழக்கம்போல பெண் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேன் கீழ்நாடுகாணி பகுதி அருகே வியாழக்கிழமை சென்றபோது கேரளத்தில் இருந்து வந்த டிப்பா் லாரியின் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஜானகி (55) என்ற பெண் தொழிலாளி லாரியுடன் மோதிய வேகத்தில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்தாா். அவரை கேரள மாநிலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்த விபத்தில் வேனில் சென்ற மேலும் 27 போ் காயமடைந்தனா். அவா்கள் கூடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து தேவாலா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com