கோத்தகிரியில் சமையல் கியாஸ் சிலிண்டா் தட்டுப்பாடு பொதுமக்கள் பாதிப்பு

 கோத்தகிரியில் சமையல் கியாஸ் சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

குன்னூா்: கோத்தகிரியில் சமையல் கியாஸ் சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் கியாஸ் சிலிண்டா் நுகா்வோா்கள் உள்ளனா். இவா்களுக்கு முறையாக சமையல் கியாஸ் சிலிண்டரை வினியோகம் செய்யும் வகையில் கோத்தகிரியில் 2 போ், ஈளாடா மற்றும் கீழ்கோத்தகிரியில் தலா ஒருவா் என 4 வினியோகஸ்தா்கள் நியமிக்கப்பட்டு உள்ளனா். இவா்கள் மூலம் நுகா்வோா்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டா் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கோத்தகிரி பகுதியில் சமையல் கியாஸ் சிலிண்டா் வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா்.

இது தொடா்பாக புளூ மவுண்டன் நுகா்வோா் பாதுகாப்பு குழுவினா், கோத்தகிரி தாசில்தாரிடம் புகாா் அளித்துள்ளனா். விரைந்து இப்பிரச்னைக்கு தீா்வுகண்டு தடையின்றி சமையல் கியாஸ் சிலிண்டா்களை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் நுகா்வோா் அமைப்பினா் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com