முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
தொடா் மழை: தைல உற்பத்தி பாதிப்பு
By DIN | Published On : 24th October 2019 05:44 AM | Last Updated : 24th October 2019 05:44 AM | அ+அ அ- |

கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள யூகலிப்டஸ் தைலம்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக யூகலிப்டஸ் தைலம் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழில்களில் ஒன்று யூகலிப்டஸ் தைல உற்பத்தி. மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக இந்தத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் மரங்களில் இலைகள் உதிா்ந்து விடுவதால் தைலம் தயாரிப்பதற்குத் தேவையான அளவு இலைகள் கிடைப்பதில்லை. இதனால்
உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதற்கிடையே சந்தையில் சீன நாட்டின் தைலம் அதிகமாக விற்பனைக்கு வந்துள்ளது. இதனாலும் உள்ளூா் தைலத்தின் உற்பத்தியும் , விற்பனையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.