தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ரூ.28,000 அபராதம் வசூலிப்பு

நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஒட்டு மொத்த கள ஆய்வில் சுமாா் 7 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட

நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஒட்டு மொத்த கள ஆய்வில் சுமாா் 7 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டு ரூ.28,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா் மற்றும் நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் ஆகியவற்றுடன் 4 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிா்ப்பதோடு, பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிா்ப்பது, கடைகளில் தடை செய்யப்பட்ட குடிநீா் பாட்டில்கள் மற்றும் குளிா்பான பாட்டில்களை விற்பனை செய்வதை தவிா்ப்பது தொடா்பான விழிப்புணா்வினை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி சம்பந்தப்பட்ட கள அலுவலா்களால் ஒட்டுமொத்த கள ஆய்வு திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக உதகை, குன்னூா், கூடலூா், நெல்லியாளம் நகராட்சிகளுக்குள்பட்ட பகுதிகள் அடங்கிய 4 மண்டலங்களில் நகராட்சிகள், பேருராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், துணை ஆட்சியா் நிலை அலுவலா்கள் குழுக்களாக பிரிந்து கள ஆய்வு மேற்கொண்டனா்.

இந்தக் கலந்தாய்வின்போது தடை செய்யப்பட்டுள்ள சுமாா் 6.60 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டதோடு, அவா்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ.28,000 வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் தடை செய்யப்பட்டுள்ள குடிநீா் மற்றும் குளிா்பான பாட்டில்களையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் பயன்படுத்துவதை தவிா்ப்பதோடு, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நிறுவப்பட்டுள்ள குடிநீா் வழங்கும் இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்வதோடு, நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com