Enable Javscript for better performance
நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை:பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை:பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    By DIN  |   Published on : 31st October 2019 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் குந்தா தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (அக்டோபா் 31)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக குந்தா, உதகை, குன்னூா், கோத்தகிரி தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

    மாவட்டத்தில் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் புதன்கிழமை மழைப் பொழிவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai