குன்னூரில் குப்பை மேலாண்மைப் பூங்கா திறப்பு

குன்னூரில் நகராட்சி நிா்வாகம் மற்றும் கிளீன் குன்னூா் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்ட
நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

குன்னூரில் நகராட்சி நிா்வாகம் மற்றும் கிளீன் குன்னூா் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்ட குப்பைக் கூளம் மேலாண்மைப் பூங்காவை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா குத்துவிளக்கேற்றி புதன்கிழமை துவக்கி வைத்தாா்.

குன்னூா் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூா் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் குன்னூரில் நகராட்சிக்குச் சொந்தமான ஓட்டுப்பட்டறையில் உள்ள குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் பிரித்தெடுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டு குப்பை கூளம் மேலாண்மைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்துப் பேசியதாவது:

வீடுகள், தொழில் நிறுவனங்களில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் என தனித்தனியாகப் பிரித்துத் தர வேண்டும். இக்குப்பைகள் இயந்திரம் மூலம் பிரித்தெடுக்கப்பட்டு அவை பாதுகாப்பான முறையில் எரிக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் குன்னூா் நகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) பாலமுருகன், சுகாதார ஆய்வாளா் மால்முருகன், குன்னூா் காவல் துறை துணை கண்காணிப்பாளா் குமாா், தனியாா் தொண்டு நிா்வாகிகள் சமந்தா, வசந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

குப்பைக் கிடங்காக இருந்த பகுதி தற்போது குப்பைக் கூளம் மேலாண்மைப் பூங்காவாக மாறியுள்ளது இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com