சுடச்சுட

  

  பந்தலூரை அடுத்துள்ள தாளூரிலிருந்து கோவைக்கு புதிய அரசுப் பேருந்து இயக்கம் செவ்வாய்க்கிழமை துவங்கியது.
  நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலூகாவிலுள்ள கேரள மாநில எல்லையோர கிராமமான தாளூரிலிருந்து தமிழக அரசுப் பேருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு கூடலூர் பேருந்து நிலையம் வந்தடைகிறது.  இரவு 10.30 மணிக்கு கூடலூரிலிருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு கோவை சென்றடைகிறது. 
  பின்னர் கோவையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு கூடலூர் வந்தடையும். தாளூரில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் போக்குவரத்து அதிகாரிகள், அதிமுக, திமுக தொழிற்சங்க  நிர்வாகிகள், காவல் துறையினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai