சுடச்சுட

  

  நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முழு கொள்ளளவை எட்டிய மேல்பவானி அணை புதன்கிழமை திறக்கப்பட்டது.
  நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே பரவலாகத் தொடர்ந்து மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்து  வருகிறது. இதன் காரணமாக  மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன.  கடந்த வாரத்தில் பைக்காரா, அவலாஞ்சி ஆகிய அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. 
  இந்நிலையில்  மேல்பவானி அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்புக் கருதி, 500 கன அடி நீர்  புதன்கிழமை பிற்பகல் 3 மணியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai