சுடச்சுட

  

  நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை( செப்டம்பர் 13) நடைபெறுகிறது.
  உதகை வட்டத்தில் தும்மனட்டி கிராமத்திலுள்ள கப்பச்சி சமுதாயக் கூடத்திலும்,  குன்னூர் வட்டத்தில் பர்லியாறு கிராமத்திலுள்ள புதுக்காடு சமுதாயக் கூடத்திலும்,  கோத்தகிரி வட்டத்தில் கோத்தகிரியிலுள்ள புயல் நிவாரணக் கூடத்திலும்,  குந்தா வட்டத்தில் பிக்கட்டி கிராமத்திலுள்ள எடக்காடு தலையட்டி சமுதாயக் கூடத்திலும்,  கூடலூர் வட்டத்தில் முதுமலை கிராமத்திலுள்ள கார்குடி உண்டு உறைவிடப் பள்ளி வளாகத்திலும், பந்தலூர் வட்டத்தில் நெல்லியாளம் கிராமத்திலுள்ள உப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்திலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன. 
  எனவே, இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் இந்த முகாம்களில் பங்கேற்று தங்களது குறைகளை அங்கேயே நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai