சுடச்சுட

  

  உதகை மாவட்ட நீதிமன்றத்தில்  மாவோயிஸ்ட் டெனிஸ் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். 
  குன்னூர் அருகே நெடுங்கல்கம்பை பகுதியில் அரசுக்கு எதிராக மலைவாழ் மக்களை மூளைச் சலவை செய்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்  டெனிஸ் (23) உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை   வெள்ளிக்கிழமை  மாலை 6 மணி வரை நீலகிரி  மாவட்ட மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்த  நீதிபதி உத்தரவிட்டார்.  
  இதையடுத்து  நீதிமன்றத்திலிருந்து மாவோயிஸ்ட் டெனிஸை  காவல் துறையினர் வெளியே அழைத்து வந்தபோது தமிழக அரசு இந்துத்துவா மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அவர் கோஷங்களை எழுப்பியதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது . 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai