சுடச்சுட

  

  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்  பறிமுதல்: ரூ.22,000 அபராதம் வசூலிப்பு

  By DIN  |   Published on : 13th September 2019 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 6 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.22,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
  நீலகிரி மாவட்டத்தில்  உதகை, குன்னூர்,  கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள்,  4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருள்களின் பயன்பாடு தொடர்பாக புதன்கிழமை ஒட்டுமொத்த கள ஆய்வு நடத்தப்பட்டது.
   இந்த ஆய்வின்போது தடை செய்யப்பட்ட 186  குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், சுமார் 6 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.  இதற்காக  அவர்களிடமிருந்து ரூ.22.000 அபராதம் வசூலிக்கப்பட்டது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai